கோவை: தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை, தீபாவளி பண்டிகை காரணமாக மக்கள் கூட்டம், அதன் பின் வரக்கூடும் டிசம்பர் மாத பனிக்காலம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ச்சியாக விழாக்களும், அசாதாரணமான சீதோஷண நிலையால், தமிழகத்தில் கொரோனா நோய் மேலும் பரவ வாய்ப்பு உள்ளது. ஐ த நிலையில், வரும் 16 ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கலாம் என்ற அறிவிப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும், என்று புதிய தமிழகம் கட்சியின், நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி, முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக உலகெங்கும் பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வரும் நிலையில், தற்போது தான் ஒவ்வொரு தேசமும் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இருந்த போதும், தினமும் 50,000 பேருக்கு குறைவில்லாமல் கொரோனா நோய் தொற்றால் இன்னமும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.
"குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. பருவ மழை மற்றும் பண்டிகை நாட்கள் வருவதால், மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இச்சூழலில் வரும் 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதை நல்ல முடிவாக கருத இயலாது", என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற முடிவை ஆந்திரா அரசு எடுத்தால் ஆண்டு ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர், என்று தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய எட்டு மாதங்களுக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் பட்சத்தில் மாணவர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கி பேசவும், பழகவும் செய்வார்களே தவிர, சமூக இடைவெளியை அமலாக்குவது மிகவும் கடினமான செயலாக இருக்கும். இதனால், கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகமாகுவதற்குண்டான வாய்ப்பாக அமைந்துவிடும், என அச்சப்படுகிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று சம நிலையை அடைந்த பிறகே, பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது சரியானதாக இருக்க முடியும். எனவே, 16-ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு என்ற அரசின் முடிவை கைவிட வேண்டும் என, டாக்டர். கிருஷ்ணசாமி, முதவருக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.