கோவையில் ஐம்பொன் சிலை கடத்தலில் கைதான ஒருவருக்கு கொரொனா தோற்று; மருத்துவமனையில் அனுமதி

கோவை: கோவையில், சமீபத்தில் பழங்கால ஐம்பொன் சிலை பாகத்தை விற்பதற்காக, இடையர் வீதி சந்திப்பில் சுற்றித்திரிந்த சலிவன் வீதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 36), செல்வபுரத்தைச் சேர்ந்த பாலவெங்கடேஷ் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: கோவையில், சமீபத்தில் பழங்கால ஐம்பொன் சிலை பாகத்தை விற்பதற்காக, இடையர் வீதி சந்திப்பில் சுற்றித்திரிந்த சலிவன் வீதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 36), செல்வபுரத்தைச் சேர்ந்த பாலவெங்கடேஷ் (36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், சிலை கடத்தல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திரத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (36), அருண் (40) மற்றும் தீனதயாளன் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து பழங்கால 33 கிலோ எடை கொண்ட மன்னர் சிலை 30 கிலோ எடை கொண்ட ராணி சிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தபட்ட அனைவரையும் விசாரித்து, சிறையில் அடைத்த நிலையில், கைதான வெங்கடேஷுக்கு தொடர்ந்து காய்ச்சல் தலைவலி, சளி தொந்தரவு இருந்துள்ளது.

உடனடியாக சிறையில் உள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக, அவரை தனிமைப்படுத்தி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டார்.

போலீஸ் பாதுகாப்போடு அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலை கடத்தல் வழக்கில், கைதான நபருக்கு கொரோனா தொற்று உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...