பெண்களிடம் அக்கறை காட்டுவது போல் பேசி, நகைகளை நூதனமாக திருடி வந்த வாலிபர் கைது

கோவை: தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அக்கறை காட்டுவது போல் பேசி, நகைகளை நூதனமாக திருடி வந்த வாலிபர் மற்றும் அவருக்கு துணையாக இருந்த மற்றொருவரை, கோவை காட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் அக்கறை காட்டுவது போல் பேசி, நகைகளை நூதனமாக திருடி வந்த வாலிபர் மற்றும் அவருக்கு துணையாக இருந்த மற்றொருவரை, கோவை காட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை காந்திபுரம் மூன்றாவது வீதியில் வசிப்பவர் பாலகணேஷ் மற்றும் கனிமொழி (30), தம்பதி. நேற்று, கனிமொழி காந்திபுரம் வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் கனிமொழியை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அப்போது, கனிமொழியிடம் பேசிய அந்த வாலிபர், "இந்த பகுதியில் அதிகம் கொள்ளை நடந்துள்ளது, எனவே நகையை கழுத்தில் அணிந்து செல்வது மிகவும் ஆபத்தானது. அதனால், கழட்டி பத்திரமாக கைப் பையில் வையுங்கள்" என்று கூறியுள்ளார்.

அவர் பேசியது உண்மை என்று நம்பிய கனிமொழி, அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை கழற்றி கையில் வைத்துக்கொண்டார்.

தொடர்ந்து, அந்த வாலிபர் கனிமொழியயிடம், நீங்கள் இங்கு செல்கிறீர்கள் என்று கேட்கவே, அதற்கு அவர் தான் ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு, அந்த வாலிபர், நானும் அதே பகுதியிக்கு தான் செல்கிறேன், என் வண்டியில் ஏறுங்கள் நான் அங்கு இறக்கி விடுகிறேன், என்று கனிவாக கூறியுள்ளார்.

அந்த, வாலிபரின் கனிவான பேச்சு கனிமொழிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. பின், கனிமொழி அவரது மோட்டார் சைக்கிளில் ஏறியுள்ளார். அந்த பெண் வைத்திருந்த கைபை, இடையூறாக இருந்ததால் அதனை வாங்கி, அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் வைத்து கொண்டார்.

ஆவாரம்பாளையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்ததும், கனிமொழியை இறக்கிவிட்டு விட்டு, அந்த கைப்பையுடன் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பினார்.

அதிர்ச்சி அடைந்த கனிமொழி, இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நூதன திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வந்த நிலையில், அதே பகுதியில் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

தொடர், விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் (20) என்பதும், கணவரை இழந்த பெண்களை குறிவைத்து அவர்களிடம் ஆதரவாக பேசி, நாடகமாடி, நூதன முறையில் நகைகளை கொள்ளையடிப்பது தெரியவந்தது.

மேலும், இவருக்கு உடந்தையாக ஹரிபிரசாத் (36), என்பவர் இருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, காட்டூர் போலீசார் இருவரை மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகையையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், இருவரும் இதுபோல எத்தனை பெண்களிடம் கைவரிசை காட்டியுள்ளனர் என்பது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...