கோவை: கோவை சிங்காநல்லூரில் நள்ளிரவில், கோபுர கலசத்தை திருட முயன்ற கொள்ளையர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர், வெள்ளலூர் ரோடு பகுதியில், ஒரு விநாயகர் கோயில் உள்ளது. நேற்று இரவு சிங்காநல்லூர், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது, கோவிலில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இதனால், சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, கோயில் கோபுரத்தில் இருந்து 2 வாலிபர்கள் இறங்குவதை பார்த்துள்ளனர்.
உடனே, உஷாரான போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். மர்ம நபர்கள் கோவில் கலசத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததும், போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடி விட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து, போலீசார், திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். போலீசார் ரோந்து சென்றதால் கோபுர கலசம் தப்பியது, என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.