கோவை பூமார்க்கெட்‌, பாரதி பார்க்கில்‌ செயல்படும்‌ பயோ-கேஸ்‌, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்களில்‌ மாநகராட்சி ஆணைய‌ர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம்‌ ரோடு பூமா்க்கெட்‌, அம்மா உணவகம்‌, பாரதி பார்க்கில்‌ செயல்படும்‌ பயோ-கேஸ்‌, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்களில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம்‌ ரோடு பூமா்க்கெட்‌, அம்மா உணவகம்‌, பாரதி பார்க்கில்‌ செயல்படும்‌ பயோ-கேஸ்‌, நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ மையங்களில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ ரோட்டில்‌ புதியதாக ரூ.95 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டப்பட்டுவரும்‌ பூ மார்க்கெட்டை பார்வையிட்ட ஆணையாளர்‌ அவர்கள்‌ பணிகள்‌ முடியும்‌ தருவாயில்‌ உள்ள நிலையில்‌ மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு தொடாபுடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டார்.



அதனைத்‌ தொடர்ந்து, பழைய பூமார்க்கெட்‌ புனரமைக்கும்‌ பணிகள்‌ நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்‌.



மேலும்‌, அங்கு செயல்பட்டு வரும்‌ அம்மா உணவகத்தை பார்வையிட்டு அங்கு சமைத்துள்ள உணவுகளை சாப்பிட்டு உணவுகள்‌ தரமானதாக உள்ளதா என ஆய்வு செய்தார்.



பின்னர்‌, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாநகராட்சி பாரதி பூங்கா அருகில்‌ உணவுக்கழிவுகள்‌ மற்றும்‌ காய்கறி கழிவுகளிலிருந்து பெறப்படும்‌ பயோ கேஸ்‌ மூலம்‌ மின்‌ உற்பத்தி செய்யும்‌ மையத்தின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ அங்கு மக்கும்‌ குப்பைகள்‌ கொண்டு நுண்ணுயிர்‌ உரம்‌ தயாரிக்கும்‌ பணிகளையும்‌ மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மேற்கு மண்டல உதவி ஆணையர்‌ ஏ.ஜே.செந்தில்‌ அரசன்‌, செயற்பொறியாளா்‌ (ஸ்மார்ட்‌ சிட்டி) சரவணகுமார்‌, உதவி பொறியாளா்‌ கமலக்கண்ணன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...