பொது மக்களின் நலன் கருதி அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு நடவடிக்கை - முதலமைச்சர் பழனிச்சாமி

கோவை: பொது மக்களின் நலன் கருதி அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்யவும் இதை நடத்துவர்களை கைது செய்யவும் அரசு உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


கோவை: பொது மக்களின் நலன் கருதி அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்யவும் இதை நடத்துவர்களை கைது செய்யவும் அரசு உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னையிலிருந்து கோவை வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை கோவை விமான நிலையத்தில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.



கொட்டும் மழையிலும் ஏராளமான அதிமுகவினர் விமான நிலையம் முன்பாகவும், விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியிலும் வரவேற்பளிக்க நின்று இருந்தனர்.



அப்போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் பேசுகையில், கோவை மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது எனவும் உக்கடம் மேம்பாலம், சுங்கம் சந்திப்பு மேம்பாலம், கவுண்டம்பாளையம் சந்திப்பு மேம்பாலம் என பல்வேறு இடங்களில் மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. அவினாசி சாலை மேம்பாலம் போன்றவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோவைக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

மேலும், ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலைக்கு உள்ளாகி இருக்கின்றனர். பொது மக்களின் நலன் கருதி அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்யவும் இதை நடத்துவர்களை கைது செய்யவும் அரசு உரிய சட்ட திருத்தம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இளைஞர்களின் வாழ்க்கையை இந்த ஆன்லைன் விளையாட்டுகள் சீரழிப்பதுடன் அவர்கள் உயிரை போக்கி கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றது. மக்களின் கருத்துகள் அடிப்படையில் இதை தடை செய்வது குறித்து பரீசிலித்து ஆன்லைன் ரம்மியை தடை செய்ய இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

நடிகர் விஜய் புதுகட்சி துவங்க இருப்பதாக கேட்கப்பட்டதற்கு அது அவரது உரிமை என தெரிவித்தார். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேர் விடுதலை கவர்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும் அவர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றவர், 7 பேர் விடுதலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகின்றார். 2000ம் ஆண்டில் திமுக ஆட்சியில் 7 பேர் விடுதலை கோரிக்கை வந்த போது அமைச்சரவையில் நளினியை தவிர்த்து மற்றவர்களின் கோரிக்கையை நிராகரித்ததாக கூறினார்.

இவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம் என அமைச்சரவையில் திமுக முடிவெடுத்த நிலையில், அதிமுக இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தது. இந்த 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு அக்கறையுடன் செயல்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

அதேபோல, தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு சட்டரீதியாக அனுமதிக்க முடியாது எனவும் ஊர்வலம் பொது கூட்டங்கள் நடத்தக் கூடாது மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றியுள்ளன. அதன்படி வேல் யாத்திரைக்கு அந்த அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.

மேலும், திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர் ஓட்டப்படுவது குறித்த கேள்விக்கு யாரோ ஒட்டும் போஸ்டர்களுக்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார். பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் திறக்கலாம் என முடிவு செய்யப்பட்ட நிலையில், ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வாயிலாக பள்ளிகள் திறக்கப்பட்டால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டதின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது என்றார்.

மேலும், இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் இடம் பெறும் ஆலோசனைகள் முடிவுகளின்படி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். கோவை வந்த முதல்வரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் அவர்கள் வந்த வாகனங்கள் அவினாசி சாலையில் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...