கோவை: கோவையில் கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை: கோவையில் கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்து உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை மருதமலை ரோடு, புட் ஹில்ஸ், லெப்ரசி காலனி, பகுதியில் வசிப்பவர் வசித்து வந்தவர் சிவமுருகன் (வயது 56). இவருக்கு வைர ராணி என்ற மனைவியும், யுவஸ்ரீ (22), ஹேமா (19) என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர் கடந்த சில நாட்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் ஏலச்சீட்டு எடுத்த பலர் இவருக்கு மீண்டும் திரும்பி பணம் கட்டவில்லை.
இந்நிலையில், இவரிடம் சிறுசேமிப்பு செய்திருந்தவர்கள் தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இவரால் எதுவும் செய்ய முடியாத நிலையில், பால் பாக்கெட் வியாபாரம் செய்துள்ளார். அதிலும் போதிய லாபம் கிடைக்கவில்லை.
இதனிடையே, பணம் செலுத்தியவர்கள் மீண்டும் பணத்தை கேட்டு தொடர்ந்து வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் என்ன செய்வது என தெரியாது சிவமுருகன் நேற்று இரவு குடும்பத்தோடு தூங்குவதற்கு முன்பாக தென்னை மரத்தை தாக்கும் பூச்சி கொல்லி மாத்திரையை வாங்கி வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் வீட்டை உடைத்து சென்று உள்ளே பார்த்தனர். அதில் சிவமுருகன், வைர ராணி, யுவஸ்ரீ ஆகியோர் வாயில் நுரைதள்ளி இறந்து கிடந்தனர். இன்னொரு மகள் ஹேமா உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருந்தார்.
இதையடுத்து, அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.