கோவை: கோவையில் நேற்று நள்ளிரவில் ரயில் மீது கல் வீசி தாக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் இருந்து கோவை நோக்கி நேற்று முன்தினம் இரவு இன்டர்சிட்டி ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, வட கோவைக்கு முன்பாக ரயில் வந்தபோது, மர்ம கும்பல் ஒன்று ரயில் பெட்டிகளின் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கியது. இதில் குளிர்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டியில் கண்ணாடிகள் உடைந்து சிதறியது.
சம்பவத்தால், பதறி போன பயணிகள் இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து விசாரணை நடத்தினர். கல்வீச்சில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இரவு நேரத்தில் ரயில் பாதையில் மது அருந்திவிட்டு சுற்றித்திரியும் கும்பல் யாரேனும் கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இது போன்ற கும்பல்கள், தண்டவாளத்தில் கிடக்கும் ஜல்லி கற்களை எடுத்து வீசி திடீரென தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த மர்ம கும்பலை இரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.