கோவை: கோவை - கேரளா எல்லையில் ஆட்டோவில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த கேரள போலீசார் 63 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கேரள எல்லைப்பகுதியான வாளையார் பகுதியில் இன்று மதியம் கேரள போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அதன் வழியாக ஜெய் ஸ்ரீராம் என எழுதப்பட்ட ஒரு ஆட்டோ அதிவேகமாக வந்தது. அதனை பார்த்த கேரள போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய முயன்றனர்.
ஆனால், போலீசார் தடுப்பதை தெரிந்ததும் உடனடியாக ஆட்டோவை நிறுத்தாமல் மிக வேகமாக சென்றனர்.

இதை பார்த்த போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
அப்போது, அந்த ஆட்டோவில் இரண்டு மூட்டைகள் இருந்தன. அதை சோதனையிட்ட போது அதில் 63 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த தமிழ்நாடு தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜெயசீலன், காதர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கேசவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஆட்டோ பறிமுதல் செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.