திருப்பூருக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க இருப்பதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளோடு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவிருப்பதாக திருப்பூரில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வரும் 6ம் தேதி அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளோடு ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ளவிருப்பதாக திருப்பூரில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வருகின்ற 6ம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.



இந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க இருப்பதாகவும், அதன் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த வளர்ச்சித் திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைப்பதாக தெரிவித்தார்.

மேலும், அதன்பிறகு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மற்றும் விவசாயிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளோடு ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார். இன்று நடந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...