கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி சமூகநீதி கட்சியினர் ஆர்ப்பாட்டம் - போஸ்டர்களை தீ வைத்து எரிக்க முயன்றதால் பரபரப்பு!

கோவை: கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் போஸ்டர்களை தீ வைத்து எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் போஸ்டர்களை தீ வைத்து எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



ரம்மி, டிரீம் லெவன் போன்ற ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வலியுறுத்தி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூகநீதி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விளையாட்டுகளை தடை செய்ய தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், ஆர்ப்பாட்டத்தின் நடுவே போஸ்டர்களை தீ வைக்க முயன்றனர். இதனை போலீசார் தடுத்த நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சமூகநீதி கட்சி தலைவர் பன்னீர் கூறுகையில், தமிழகத்தில் இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு பணத்தை இழந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து உள்ளதாக தெரிவித்தார்.



அதேபோல நடிகர், நடிகைகளின் ஆன்லைன் விளம்பரங்களை பார்த்து மக்கள் ஏமாறுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், தொழில் சட்டத்தின் கீழ் இந்த ஆன்லைன் சூதாட்டம் வராத காரணமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் யார் என கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறினார்.

மேலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தனி சட்டத்தை தமிழக அரசு இயற்றிட வேண்டும் எனவும் இதனை கண்காணிக்க சைபர் கிரைம் (Cyber Crime) காவலர்களுக்கு தனி பயிற்சி அளித்தால் மட்டுமே ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...