கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் முதியவர் மற்றும் பெண் தற்கொலை - போலீசார் விசாரணை!

கோவை: கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் ஒரு முதியவர் மற்றும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் வெவ்வேறு சம்பவங்களில் ஒரு முதியவர் மற்றும் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் என் ஆர் மணி லே அவுட் சேர்ந்தவர் ஆறுமுகம் (75), ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இவர் கடந்த 30ம் தேதி ஏடிஎம் மையத்திற்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றார். ஆனால், அவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பவானி ஆற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சடலத்தை மீட்டனர். இதில் பிணமாக கிடந்தவர் ஆறுமுகம் என்பது தெரியவந்தது. விசாரணையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆறுமுகம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.

இதேபோல, சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் (45) இவரது மனைவி பெயர் சந்திரா (40) இவர்களுடைய மகன் சரவணன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

இதனால் மனவேதனை அடைந்த சந்திரா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரண்டு சம்பவங்களும் அந்த பகுதிகளில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...