கோவை: தமிழகம் முழுவதும் கடந்த 28 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த சூழலில், தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் பருவமழை துவங்கியுள்ளதாகவும், பெரும்பாலான பகுதிகளில், கனமழை அல்லது மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பருவ மழை காலத்தில் நோய் தொற்று மற்றும் நீர் தேங்கும் அபாயம் உள்ளதால், கோவையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளில் குளோரின் மருந்து கலக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், கவுண்டம்பாளையம் - வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ், தினசரி குடிநீர் பெறப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த திட்டங்களின் மூலம், பெறப்படும் குடிநீர் பிரதான பகிர்மானக் குழாய்கள் வழியாக, காந்திபார்க், ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரதான குடிநீர் நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.
பின்னர், அங்கிருந்து பகிர்மானக்குழாய்கள் வழியாக வார்டுகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
சிறுவாணி அணை மற்றும் பில்லூர் அணைப்பகுதிகளில் இருந்து குடிநீர் பெறப்பட்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு செய்யும் பொழுது, கேஸ்சாக மாற்றப்பட்ட குளோரின் நோய் தடுப்பு மருந்து கலக்கப்படுகிறது. அதேபோல், பிரதான நீர்தேக்க தொட்டி, வார்டுகளில் உள்ள நீர்தேக்க தொட்டிகளிலும், குளோரின் தடுப்பு மருந்து கலக்கப்படுகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழைக்காலம் துவக்கம், டெங்கு, உள்ளிட்ட நோய்களின் பரவல் போன்ற காரணங்களால் நோய் பாதிப்புகளை தடுக்க குடிநீர் நீர்தேக்க தொட்டிகளில் குளோரின் நோய் தடுப்பு மருந்து கலக்கப்படும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "மாநகராட்சி பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்ளது. இந்த தொட்டிகளில் குளோரின் நோய் தடுப்பு மருந்து கலப்பது தீவிரமாக்கப்பட்டுள்ளது. 1000 லிட்டருக்கு 4 கிராம் என்ற அளவில் குளோரின் நோய் தடுப்பு மருந்து தண்ணீரில் கலக்கப்படுகிறது," என்றார்.