கோவையில் மெட்ரோ ரயில் அமைக்க முதற்கட்ட அறிக்கை தயார்..! வெள்ளலூர் பேருந்து நிலையம் வரை வழித்தடம் சேர்க்க முடிவு!

கோவை: கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக தயார் செய்யப்பட்டு உள்ள முதற்கட்ட அறிக்கையில் கூடுதலாக வெள்ளலூர் பேருந்து நிலையம் வரை செல்லும் வழித்தடம் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


கோவை: கோவையில் மெட்ரோ ரயில் அமைப்பதற்காக தயார் செய்யப்பட்டு உள்ள முதற்கட்ட அறிக்கையில் கூடுதலாக வெள்ளலூர் பேருந்து நிலையம் வரை செல்லும் வழித்தடம் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

கோவையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு இங்கு மெட்ரோ ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று

முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கோவையில் மெட்ரோ ரயில் இயக்க சாத்தியக்கூறுகள் உள்ள வழித்தடங்கள் குறித்து முதற்கட்ட ஆய்வு செய்தது. தற்போது இந்த முதற்கட்ட ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் மொத்தம் 5 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மொத்த தூரம் 136 கிலோ மீட்டர் ஆகும். இதில் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, தொண்டாமுத்தூர் ரோடு, திருச்சி ரோடு, சத்திரோடு ஆகிய 5 வழித்தடங்கள் ஆகும்.

இந்த நிலையில், இதில் கூடுதலாக வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் ஒரு மெட்ரோ வழித்தடம் ஏற்படுத்தவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தமிழக அரசிடம் இந்த அறிக்கையை அளித்ததும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...