கோவை டாடாபாத் பகுதியில் மின்வாரிய தலைவரைக் கண்டித்து பாட்டு பாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை டாடாபாத் பகுதியில் மின்வாரிய தலைவரை கண்டித்து பாட்டு பாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை டாடாபாத் பகுதியில் மின்வாரிய தலைவரைக் கண்டித்து பாட்டு பாடி ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அப்போது, மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சால் அவரின் தன்னிச்சையான போக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கந்தவேல் கூறுகையில், மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் எனவும் இந்த விவகாரம் குறித்து கூட்டு நடவடிக்கை குழுவிடமோ அரசாங்கத்திடமோ கலந்து ஆலோசிக்காமல் தனியாருக்கு விற்கும் முயற்சியில் வாரிய தலைவர் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

அதேபோல, மின்சார வாரியம் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதாக கூறிய அவர், தன்னலம் கருதாமல் கொரோனா கால கட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் பணியாற்றியதாகவும் தங்களது கடமைகளை செவ்வனே செய்துள்ளதாக தெரிவித்தார்.



தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் தர்ணா போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் அறம் சார்ந்த வழியில் தர்ணா போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், 230kv துணை மின் நிலையங்கள் தனியாருக்கு கொடுக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் தன்னிச்சையான முடிவெடுத்த வாரிய தலைவரை உடனடியாக மாற்றிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். தமிழக அரசு மின்வாரிய ஊழியர்களுக்கு கூட்டுக் குழுவுடன் ஆலோசனை செய்யாமல் 10% போனஸ் அறிவித்துள்ளது. இதனை மின்வாரிய ஊழியர்கள் ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தின் போது துணை மின் நிலையங்களை தனியாருக்கு கொடுப்பதை ரத்து செய்ய வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 20% போனஸ் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டு பாடி நூதன வழியில் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...