கோவையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நீதிபதிக்கு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நீதிபதி அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நீதிபதி அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாவட்ட ஆட்சியர், காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என மக்கள் பணியாற்ற கூடியவர்களிடம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக நீதிபதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்ட முன்னாள் தலைமை குற்றவியல் நடுவரும் தற்போது தேனி மாவட்ட நீதிபதியாக இருக்கிறார். இவர் பெயர் முகம்மது ஜியாவுதீன். இவருக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, சளி தொந்தரவு இருந்து வந்தது.

இந்த நிலையில், பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய மனைவி பெயர் புவனேஸ்வரி அவரும் மதுரை மாவட்ட முதன்மை நீதிபதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...