கோவை: கோவையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால ஐம்பொன் சிலைகளை விற்க முயன்ற வழக்கில், ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தப்பி சென்ற மூவரை கோவை தனிப்படை காவல்துறையினர், ஓட்டன் சத்திரத்தில் வைத்து மடக்கி பிடித்தனர்.

சமீபத்தில், கோவை வெரைட்டி ஹால் போலீசார், இடையர் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமான நிலையில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றதால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அதில், ஒருவர் மட்டும் தப்பிய நிலையில், இருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், பிடிபட்ட இருவரை சோதனை செய்த போது, அவர்களிடம் பழங்கால ஐம்பொன் சிலைகளின் ஒரு பகுதி மட்டும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் போலீசார் விிசாரணை செய்ததில், கோவை சலிவன் வீதியைச் சேர்ந்த ஹரி என்ற ஜெயச்சந்திரன் (வயது 36), செல்வபுரம் அமுல் நகரைச் சேர்ந்த பால வெங்கடேஷ் (36), என்பது தெரியவந்தது.
மேலும், இருவரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் 200 கிராம் எடை கொண்ட ஐம்பொன் சிலையின் உடைந்த பாகத்தை, இவர்களிடம் கொடுத்து விற்றுத் தர சொன்னதாகவும், அதற்கு உரிய கமிஷன் தருவதாக, அவர் தெரிவித்ததாகவும், கூறியுள்ளனர்.
இவர்களிடம் இருந்த ஐம்பொன் சிலையின் ஒரு பகுதியை பறிமுதல் செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பிடிபட்ட இருவர் கொடுத்த தகவலின் பேரில், ஒட்டன்சத்திரம் சென்ற கோவை தனிப்படை போலீசார், திருநாவுக்கரசு (38), தீனதயாளன் (36), அருண் (41), ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 33 கிலோ எடையுள்ள ஐம்பொன்னால் ஆன ஆண் உருவச்சிலையும், 20 கிலோ எடையுள்ள பெண் உருவச் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும், என கூறப்படுகிறது.
விசாரணையில், மதுரையிலிருந்து ஒட்டன்சத்திரத்தில் கொண்டு வந்து அதன் ஒரு பாகத்தை உடைத்து கோவையில் நல்ல விலைக்கு விற்க முயன்றது தெரியவந்துள்ளது.
சிலைகள் பிடிபட்டது குறித்து போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தெரிவிக்கையில் : -
சிலையின் மதிப்பு குறித்து தொல்லியல் துறை மூலமாக ஆய்வு செய்யப்பட உள்ளது. சிலைகளை எந்த கோவில் அல்லது அரண்மனையில் இருந்து திருடி வந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சிலைகள் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.