கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அட்டகட்டியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக பயிற்சி மையத்தில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் வன ரோந்து பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ரோந்து பணியாளர்களுக்கு ரோந்தின் போது கடைப்பிடிக்க வேண்டியவற்றை குறித்து அறிவுரைகள் மற்றும் வன உயிரினங்களை எதிர்கொள்வது பற்றிய பயிற்சியும் தன்னார்வலர்களால் அளிக்கப்பட்டது.

மேலும், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சுழற்கோப்பை, கேடயம் சான்றிதழ், மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டது.
அப்போது, அக்டோபர் மாதம் சிறப்பாக பணியாற்றிய உலாந்தி வனச்சரக, வரகளியாறு சுற்றுப் பணியாளர்களுக்கு, துணை இயக்குனர், ஆரோக்கிய ராஜ் சேவியர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

மேலும், பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட வேட்டை தடுப்பு காவலர் முகாமாக வால்பாறை வனச்சரகம் கோனலாறு முகாம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பணியாளர்களுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, உலாந்தி மற்றும் பொள்ளாச்சி ஆகிய வனச்சரகங்களின், முதல்நிலை பணியாளர்களுக்கு குளிர்கால ஆடைகள் வழங்கப்பட்டது. மேலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனப்பழகுநர்களாக பயிற்சியில் ஈடுபட்ட 14 பேர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 18 மலைவாழ் குடியிருப்புகளுக்கு சூரியசக்தி மின் வசதி அளித்த தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
இந்நிகழ்வில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர், கள இயக்குநரின் நேர்முக உதவியாளர் முரளீதரன், உதவி இயக்குனர் செல்வம், வனச்சரகர்கள் ஜெயச்சந்திரன், மணிகண்டன் புகழேந்தி, நவீன்குமார், நடராஜன் தன்னார்வலர்கள் ஆனந்த் குமார், கணேஷ், கோபாலகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி வால்பாறை மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய வனச்சரக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.