கோவை: கோவை - ஷார்ஜா இடையே நாளை முதல் ஒவ்வொரு புதன்கிழமை தோறும், மேலும் ஒரு புதிய விமான சேவையை, 'ஏர் அரேபியா' நிறுவனம், துவக்கியுள்ளது.
கோவை: கோவை - ஷார்ஜா இடையே நாளை முதல் ஒவ்வொரு புதன்கிழமை தோறும், மேலும் ஒரு புதிய விமான சேவையை, 'ஏர் அரேபியா' நிறுவனம், துவக்கியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவலுக்கு முன்பு, ஏர் அரேபியா நிறுவனம் சார்பில், கோவையிலிருந்து ஷார்ஜா இடையே விமான சேவையானது, வாரத்தில் ஐந்து நாட்கள் வழங்கப்பட்டு வந்தது.
தற்போது வாரந்தோறும் ஒருநாள் (சனிக்கிழமை) மட்டுமே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை நவம்பர் 4 ஆம் தேதி முதல் ஒவ்வொரு, புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரம் இரண்டு நாட்கள் கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "புதிய விமான சர்வீஸ் நாளை முதல் துவங்க உள்ளது. ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு அதிகாலை 3:30 மணிக்கு தரை இறங்கும் விமானம், மீண்டும் அதிகாலை 4:15 மணிக்கு ஷார்ஜா புறப்பட்டு செல்லும்."
மேலும், இந்த விமானத்தில் குறைந்தபட்சம் 2.5 டன் முதல் அதிகபட்சமாக 3 டன் வரை வரை சரக்கு ( cargo) ஏற்றப்படும். தற்போது, பூக்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் புக்கிங் செய்யப்படுகின்றன, என்று தெரிவித்தனர்.
இந்த கூடுதல் சேவை குறித்து, கொங்கு குளோபல் போரம் (KGF) இயக்குனர் டி நந்தகுமார் கூறியதாவது, " கோவை - ஷார்ஜா இடையே, மேலும் ஒரு விமான சர்வீஸ், 'ஏர் அரேபியா' நிறுவனம் துவக்க முன்வந்துள்ளது வரவேற்கத்தக்கது. எதிர்வரும் நாட்களில், விமான சர்வீஸ் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், கோவையின் பொருளாதாரம் மேம்பட வாய்ப்பு ஏற்படும்."