நீலகிரி: குன்னூர் எம்.ஜி. காலனி பேருந்து நிலையத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த லியாண்டர்(24) என்பவரை வெலிங்டன் காவல் துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் சமீப காலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இளம் மாணவ, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனிடையே, இதற்கு தீர்வு காணும் வகையில் குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு ஆங்காங்கே சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குன்னூர் எம்.ஜி. காலனி பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த லியாண்டர் என்பவரிடம் வெலிங்டன் காவல் ஆய்வாளர் பிலிப் தலைமையில் நடத்திய சோதனையில் அவரிடம் 180 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, லியாண்டரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.