கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் 665 படுக்கைகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை: கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 665 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை இஎஸ்ஐ அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 665 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 11 கிலோ லிட்டர் திரவ கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் நிர்வாக அலுவலக கட்டடத்தை ரூ.35 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட கொரோனோவிற்கு பின் கவனிப்பு பிரிவு மற்றும் செவிலியர் விடுதியில்135 படுக்கை வசதியுடன் கூடிய கூடுதல் கொரோனா சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கொரோனா தொற்று பேரிடரின் போது, தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்த சூழ்நிலையில் படுக்கை வசதிகளை மேம்படுத்தக் கருதி இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் சிதிலடைந்திருந்த நிர்வாக அலுவலகம் ரூ.35 இலட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு 80 நோயாளிகள் பயனடையும் வகையில் ஆக்ஸிஜன் மற்றும் பிற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவக் கல்லூரியின் செவிலியர் விடுதி ரூ.2 கோடி மதிப்பில் புரணமைப்பு செய்யப்பட்டுள்ளது.



ஏற்கனவே 450 படுக்கை வசதிகள் இருந்த நிலையில், இந்த கூடுதல் வசதிகள் மூலம் தற்போது 215 படுக்கை வசதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு, மொத்தம் 655 படுக்கை வசதிகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை பெற ஏதுவாக தயார் நிலையில் உள்ளது.

அதேபோல, கோவை இ.எஸ்.ஐ, மருத்துவமனையில் செயல்பட்டு வந்த RT PCR பரிசோதனை மையத்தில் தினமும் 500 மாதிரிகளை பரிசோதித்து வந்த நிலையில், ரூ.27 இலட்சம் மதிப்புடைய தானியங்கி RNA பிரித்தெடுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டு, இப்பொழுது சுமார் ஒரு நாளைக்கு 1500 மாதிரி பரிசோதனைகள் செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 2 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர் கொள்ளளவு பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், அதிகளவில் நுரையீரல் தொற்றுடன் வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை கருத்தில் கொண்டு ரூ.52 இலட்சம் மதிப்பில் 11 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர் தற்சமயம் நிறுவப்பட்டுள்ளது.

இதன்மூலம் நுரையீரல் தொற்றுடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வந்தாலும் அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க இயலும். இஎஸ்ஐ மருத்துவமனையில் தற்போது வரை சுமார் 8,100 கொரோனா தொற்று நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அதில் 7550 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நோயாளிகள் அனைவருக்கும் அரசின் உதவியுடன் நிறுவப்பட்ட CT Scan மூலம் சுமார் 7442 பேருக்கு CT Scan எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...