கோவை: கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் மதன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது ஆன்லைன் விளையாட்டு பிரியர்களை அதிர்ச்சியடைய செய்தது.
இந்த நிலையில், கோவையில் மேலும் ஒரு வாலிபர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை போத்தனூர், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (32), தனியார் நிறுவன ஊழியர். பெற்றோரை இழந்த இவர் திருமணம் ஆகாத நிலையில், உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், ஜெயச்சந்திரன் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதைப் பழக்கமாக கொண்டுள்ளார். இதனால் சம்பாதிக்கும் பணத்தை சூதாட்டத்தில் இழந்தார். இதனால் கடன் தொல்லைக்கு ஆளானார். சூதாட்டத்தில் பணம் இழப்பு மற்றும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ஜெயச்சந்திரன், விரக்தி அடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து குனியமுத்தூர் பகுதி பொதுமக்கள் கூறும்பொழுது :- என்னங்க இது நியாயமா, வீட்ல தெருக்களில் சீட்டு விளையாண்டா போலீஸ் வந்து புடிச்சிட்டு போயிடறாங்க. ஆனால், செல்போன் மூலமாக ஆன்லைனில் அரசாங்கமே ரம்மி விளையாட அனுமதிக்கிறது. அதில் கோவையில் தொடர்ந்து தற்கொலை நடைபெற்று வருகிறது. உடனடியாக ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும். உரிய அரசு மற்றும் ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.