திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் ஆபாச புகைப்படத்தை அவரது தந்தைக்கு அனுப்பிய கல்லூரி மாணவன் கைது

கோவை: கோவை மாவட்டம் கோவைபுதூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.



கோவை: கோவை மாவட்டம் கோவைபுதூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். 

அதே கல்லூரியில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தேவேஷ்வர் என்ற இளைஞரும் படித்து வந்துள்ளார். அப்போது, இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணத்தால் கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளதால், இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் காதலிப்பது பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. 

இதனால், பெண்ணின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனிடையே பெண்ணின் தந்தைக்கும், தேவேஷ்வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தேவேஷ்வர் காதலித்த போது இளம்பெண்ணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அப்பெண்ணுக்கு தெரியாமல் எடுத்த ஆபாச படங்களையும் தந்தையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி திருமணம் செய்து வைக்கக்கோரி மிரட்டியுள்ளார். 

இதையடுத்து, பெண்ணின் தந்தை குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தூத்துக்குடியில், இருந்த தேவேஷ்வரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...