கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டம்!

கோவை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டம் கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் டிஆர்.பாலு எம்பி தலைமையில் நடைபெற்றது.


கோவை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு ஆலோசனை கூட்டம் கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் டிஆர்.பாலு எம்பி தலைமையில் நடைபெற்றது.



தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிக்குழு ஆலோசனை கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இதில் கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில், கோவை மாநகர் கிழக்கு, மாநகர் மேற்கு, கோவை வடக்கு, நீலகிரி மாவட்டம் சார்பில் நடைபெற்றது. திமுக மாநில பொருளாளரும், குழுவின் ஒருங்கிணைப்பாளருமான டிஆர்.பாலு எம்பி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், திருச்சி சிவா எம்பி, திமுக துணைப்பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இதில், மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் எம்எல்ஏ, சிஆர். இராமச்சந்திரன், நீலகிரி மாவட்டம் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தொழில் முனைவோர், கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

அப்போது, கோவையில் தென்னை நல வாரியம் இல்லை, கட்டாயம் கோவை தலைமையிடமாக கொண்டு பொள்ளாச்சியில் தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும். கெளசிகா நநி சீரமைக்க வேண்டும், ஆந்திராவில் உள்ளது போல தமிழக நதிகளை இணைக்க வேண்டும்.சிறு குறு தொழில் நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டும். தொழிற்பேட்டைகள் 20 கிலோ மீட்டருக்குள் அமைக்க வேண்டும். விவசாயத்திற்கு முக்கியமான பொருளாக உள்ள மோட்டார், பம்பு செட் வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மூலப்பொருள் வங்கி துவங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதேபோல, திட்ட சாலைகள் அதிகளவில் அமைக்க வேண்டும். ஜாப் ஒர்க்கிற்கு அதிகளவில் 18 சதவீதம் ஜிஎஸ்டி போட்டுள்ளனர். 5 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி போட வேண்டும். குறுந்தொழில்களுக்கு மின்கட்டண சலுகை அளிக்க வேண்டும். சிறு குறு தொழில் கூடங்களுக்கு நலவாரியம் அமைத்து தர வேண்டும். அரசின் திட்டங்கள் கொண்டு செல்ல கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில், குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால் சிரமத்திற்கு உள்ளாவதாகவும், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், இதை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திட்ட சாலைகள் அதிகளவில் அமைக்க வேண்டும், இணைய வழி கல்வி பயில ஏழை மாணவர்களுக்கு ஸ்மாட் போன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

மேலும், கோவை பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட மானிய விலை பட்டா இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவும், இடம் வாங்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கு இடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் சார்பில் திராவிடமணி எம்எல்ஏ மாவட்ட துணை பொதுச்செயலாளர் ரவிக்குமார், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் யோகேஷ்வரன் ஆகியோர் கூறும் போது, நீலகிரியில் இருந்த உருளைக்கிழக்கு ஆராய்ச்சி மையம் குஜராத்திற்கு மாற்றிவிட்டனர். இதை நீலகிரியில் கொண்டு வர வேண்டும், தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் தேயிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும், சுற்றுலாத்துறையை மேம்படுத்த வேண்டும், கட்டிடம் கட்டும் நடைமுறை சிக்கலை எளிமைப்படுத்த வேண்டும், வியாபாரிகளின் வாடகை பிரச்சினையை சுமூகமாக தீர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, மாலையில் கோவை மாநகர் கிழக்கு, கோவை தெற்கு, மாவட்டங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...