கோவையில் கஞ்சா மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 49 பேர் கைது! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் கஞ்சா மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 49 பேர் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவையில் கஞ்சா மற்றும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 49 பேர் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரன் உத்தரவின் பேரில், நேற்று இரவு போலீசார் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அதில் 49 பேர் குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது.

அதில் கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கியவர்கள், பல கொலை மற்றும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளி வந்தவர்கள் என 49 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அவர்களிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறையினர் நேற்றிரவு நடத்திய சிறப்பு அதிரடி நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக மாநகரம் முழுவதும் 8 தனிப்படை போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...