கோவை விமான நிலையத்தில் தினமும் ரத்து செய்யப்படும் விமான சேவைகளால் பயணிகள் கடும் அவதி!

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் விமான சேவை ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.


கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் விமான சேவை ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் நோய்தொற்று பாதிப்புக்கு பின் ஊரங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் உள்நாட்டு விமான சேவை பல்வேறு நகரங்களுக்கு அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இருப்பினும் தினமும் விமான பணி ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகி உள்ளது. இது பயணிகளை கடுமையாக பாதித்துள்ளது.

இது குறித்து கொங்கு குளோபல் போரம்(KGF), இயக்குனர், டி. நந்தகுமார் கூறியதாவது:

கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு விமான போக்குவரத்து துவங்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் விமான சேவை ரத்து என்பது தினமும் வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக விமான சேவை ரத்து செய்யப்படுவதால், உதாரணத்துக்கு டெல்லியில் இருந்து கோவை வரவேண்டிய பயணி பெங்களூர் அல்லது சென்னை அல்லது அகமதாபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு பல மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டு பின்பு கோவை வந்தடையும் அவலநிலை உள்ளது. இதனால் பல மணி நேரம் வீணாவது மட்டுமன்றி தேவையில்லாமல் பல நகரங்களின் விமானநிலையத்துக்குச் சென்று அங்கு காத்திருக்கும் சூழல் உள்ளதால் 'கொரோனா' நோய் தொற்று பாதிப்பு ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.

குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது விமானங்களை இயக்க ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் எத்தகைய சிரமம் சந்திக்க வேண்டும் என்பது எங்களுக்கு புரிகிறது. இருப்பினும், நோய்தொற்று பாதிப்பால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து தற்போது தான் அனைத்து துறையும் மெல்ல மீண்டு வர துவங்கி உள்ளது.

எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த காலகட்டத்தை சேவை காலமாக கருதி குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தாலும் விமானங்களை ரத்து செய்யாமல் தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே பயணிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், "ஆம், கோவை விமான நிலையத்தில் தினமும் ஒன்று அல்லது இரண்டு விமான சேவை ரத்து செய்யப்படுவது உண்மைதான். இருப்பினும் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்காத வகையில் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றன." என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...