கோவையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம்; விவசாயிகள், தொழில் முனைவோர் உட்பட பல்வேறு அமைப்பினர் பங்கேற்பு!

கோவை: கோவையில் நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கருத்துக் கேட்பு கூட்டத்தில் தொழில் முனைவோர், விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வழங்கினர்.

கோவை: கோவையில் நடைபெற்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கருத்துக் கேட்பு கூட்டத்தில் தொழில் முனைவோர், விவசாயிகள் உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வழங்கினர்.



கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவர் டி .ஆர். பாலு மற்றும் குழு உறுப்பினர்கள் டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா, சுப்புலட்சுமி ஜெகதீசன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவையில் இருக்கக் கூடிய சிறு குறு தொழில் முனைவோர், ஓட்டல் உரிமையாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.



இதனை தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகள் சார்பிலும் சமூக இயக்கங்கள் சார்பிலும் அறிக்கை தயாரிப்பு குழுவினர் மனுக்களை பெற்றனர். இதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடனும் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். 



மேலும், சமூக அமைப்புகள் சார்பில் கலந்து கொண்ட ஒ.பி.சி கூட்டமைப்பினர் தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் மத்திய தொகுப்பிற்கு தமிழக மருத்துவ இடங்களை வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினர். 

இதேபோல, பல்வேறு அமைப்பினரும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை மனுக்களாக அறிக்கை தயாரிப்பு குழுவிடம் வழங்கினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...