கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 243 பேருக்கு தொற்று உறுதி - மொத்த பாதிப்பு 43,751 ஆக உயர்வு!

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 43,751 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கோவையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 652 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் இதுவரை கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,871 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,318 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...