கோவை கடைத்தெருக்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு கோபுரம் அமைக்க திட்டம்!

கோவை: கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, டவுன்ஹால், 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதிகாரிகள் மூலம் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, டவுன்ஹால், 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க கண்காணிப்பு கோபுரம் அமைத்து அதிகாரிகள் மூலம் கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, புது துணிகள் வாங்க, பொருட்கள் வாங்க என கடைத்தெருக்களுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இதனால் கோவையில் உள்ள கடைத்தெருக்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் கூட்டம் அதிகரிப்பு மற்றும் கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 20 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வருவாய் துறை, காவல்துறை என பல்வேறு துறை அதிகாரிகள் தலைமையில் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மக்கள் கூட்டத்தை தவிர்க்கவும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவும் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதையும் மீறி விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும் கூட மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனை அடுத்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கண்காணிப்பு கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கூறுகையில், ‘‘தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கொரோனா தொற்று பரவுதலைத் தடுக்க கோவை மாநகர் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து இதுகுறித்த அறிவிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம்.

மேலும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க கடைத்தெருக்களில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் கடைத்தெரு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று கொரோனா விதிமுறைகள் பின்பற்றபடுகிறதா? என தொடர்ந்து ஆய்வு மேற்கொள்வார்கள். இதுதவிர கடைத்தெருக்களின் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...