கோவை ரயில் நிலையத்தில் சூரிய ஒளி தகடுகள் மூலம் ரூ.6 லட்சம் வரை மின்கட்டணம் சேமிப்பு - ரயில்வே துறை அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவை ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி தகடுகள் மூலம் இதுவரை சுமார் ரூ.6 லட்சம் வரை மின்கட்டணம் சேமிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி தகடுகள் மூலம் இதுவரை சுமார் ரூ.6 லட்சம் வரை மின்கட்டணம் சேமிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னைக்கு அடுத்தபடியாக வருவாய் அளவிலும், ரயில்கள் வந்து செல்வதிலும் பெரிய ரயில் நிலையமாக கோவை ரயில் நிலையம் திகழ்கிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 70க்கும் மேற்பட்ட ரயில்கள் பிற மாநிலங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் வந்து செல்கின்றன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில், தற்போது கொரோனா அச்சம் காரணமாக சென்னை, மயிலாடுதுறை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோவை ரயில் நிலையத்தில் 6 நடைமேடைகள் உள்ளன. மேலும் பொதுமக்கள் வந்து செல்ல சுரங்கப்பாதைகள், தானியங்கி படிக்கட்டுகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கோவை ரயில்நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் 2,100 யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும் இதனால் ரயில் நிலையத்திற்கு அதிகளவு மின்கட்டணம் ஏற்படுகிறது.

இந்த நிலையில், இதனை தவிர்க்கும் வகையில் கோவை ரயில் நிலைய மேற்கூரையில் 100 கிலோ வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின் ஒளி தகடுகள் பொருத்தப்பட்டன. இவற்றின் மூலம் தினமும் 400 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் ரயில் நிலைய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை ரயில் நிலைய 1-வது மற்றும் 2-வது நடைமேடையில் உள்ள மேற்கூரைகளில் 100 கிலோ சூரியஒளி மின் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் பெறப்படும் மின்சாரம் மூலம் ரயில் நிலையத்திற்கு மாதம் ரூ.52 ஆயிரம் வரை மின்கட்டணம் மிச்சமாகிறது. அதன்படி இதுவரை ரூ.6 லட்சத்து 27 ஆயிரம் மின்கட்டணம் சேமிக்கப்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...