கோவையில் ஆன்லைன் படிப்பிற்காக பள்ளி மாணவனுக்கு அலைபேசியை வழங்கி உதவிய காவல் ஆய்வாளர்!

கோவை: கோவையில் ஆன்லைன் படிப்பிற்காக பள்ளி மாணவனுக்கு காவல் ஆய்வாளர் அலைபேசியை வழங்கி உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஆன்லைன் படிப்பிற்காக பள்ளி மாணவனுக்கு காவல் ஆய்வாளர் அலைபேசியை வழங்கி உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. வர்ணம் அடிக்கும் பணி செய்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ் அவினாசி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக சரியாக வேலை கிடைக்காமல் புகழேந்தி இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடங்கள் துவங்கப்பட்ட நிலையில், ஹரீஷ்சிடம் அலைபேசி இல்லாத காரணமாக வகுப்புகளில் கலந்து கொள்ளாமல் இருந்து உள்ளார்.

இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர் மாணவனிடம் கேட்டபோது, தன் சூழ்நிலை குறித்து தெரிவித்து உள்ளார். இதனையடுத்து, பள்ளியின் ஆசிரியர் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் மாணவனுக்கு உதவி செய்யக் கோரிக்கை வைத்த நிலையில், சிங்காநல்லூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராஜ்குமார் உதவியுடன் மாணவன் ஹரீஷிற்கு புதிதாக அலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.

கல்வி பயில அலைபேசி தேவைப்பட்ட சமயத்தில் உதவிய காவல் ஆய்வாளர் மற்றும் தனியார் அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...