கோவையில் விதவைகள் உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கோவை: கோவை மதுக்கரை அடுத்த திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலமுறை விதவைகள் உதவித் தொகை கிடைக்கப் பெற மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை மதுக்கரை அடுத்த திருமலையாம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலமுறை விதவைகள் உதவி தொகை கிடைக்கப் பெற மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து சகுந்தலா என்ற பெண் கூறுகையில், தனது கணவர் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், பல்வேறு காரணங்கள் கூறி இதுவரை தனது மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், இரு குழந்தைகள் உள்ள நிலையில் உதவி தொகை கிடைக்கப் பெற்றால் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் அளித்து உள்ளதாகவும் விதவைகள் உதவி தொகை கிடைக்கப் பெற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்து உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...