கோவை: திருத்தப்பட்ட சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் 'ஆணையமாக' மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்ட நுகர்வோர் ஆணையத்திற்கு நஷ்ட ஈடு வழங்கும் அதிகாரம், ரூபாய் 30 லட்சதிலிருந்து ஒரு கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை: திருத்தப்பட்ட சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் 'ஆணையமாக' மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்ட நுகர்வோர் ஆணையத்திற்கு நஷ்ட ஈடு வழங்கும் அதிகாரம், ரூபாய் 30 லட்சதிலிருந்து ஒரு கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு தலைவர் ( நீதிபதி), இரண்டு உறுப்பினர்கள் மற்றும் 10 ஊழியர்கள் கொண்டு கட்டமைப்புடன், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன், ஒரு மாதத்துக்கு சராசரியாக 30 வழக்குகள் பதிவு அங்கு செய்யப்படும். ஒரு மாதத்தில் 30 பதிலிறந்து 40 வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்படும்.
கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் 'ஆணையமாக' மாற்றம்
தற்போது வழக்கமான கோர்ட் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், வாதாடுதல் முடிந்த வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட், 'ஆணையமாக' மாற்றப்பட்டுள்ளது.
இதனால் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடும் அதிகாரம் ரூபாய் 20 லட்சத்தில் இருந்து ஒரு கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நுகர்வோர் கோர்ட் வட்டாரங்கள் கூறுகையில், "திருத்தப்பட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சட்டம் 2019' அமல்படுத்தப்பட்ட காரணத்தால், ஜூலை 25 முதல் கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் 'ஆணையம்' ௭ன மாற்றப்பட்டுள்ளது. இதுவரை, அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை மட்டுமே நஷ்ட ஈடு வழங்க அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இனிமேல் ஒரு கோடி ரூபாய் வரை நஷ்ட ஈடு வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது."
"முன்பு பாதிக்கப்பட்ட நுகர்வோர் எந்த மாவட்டத்தில் சம்பவம் நடந்ததோ அந்த மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் தான் வழக்கு தொடுக்க முடியும் என இருந்தது. இந்த சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இனிமேல் நுகர்வோர் எந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம்." இவ்வாறு தெரிவித்தனர்.