கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில், வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பெயர்ப்பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா இன்று நடைபெற்றது.

வால்பாறை நகைக் கடை வியாபாரிகள் சங்க தலைவர் ஏ. வி. வி. வள்ளிக்கண்ணு தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைப்பின் தலைவர் நாகராஜ் நாட்ராயன் ஆகியோரின் முன்னிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கொடியேற்றப்பட்டு பெயர் பலகையும் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிறப்பு வழிபாடுகளும் ஆராதனையும்நடைபெற்றது. தொடர்ந்து, பட்டாசு வெடித்தும், கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் பிரசாதங்கள் வழங்கியும் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, இந்து பரிஷத், இந்து முன்னணி கட்சியினர், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.