கூடலூர் அருகே தண்ணீர் எடுப்பதற்காக சென்ற பெண்ணை யானை தாக்கியதில் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர், கோக்கால் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்ற கமலாச்சி என்ற பெண்ணை, யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர், கோக்கால் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்ற கமலாச்சி என்ற பெண்ணை, யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

கூடலூர், கோக்கால் பகுதியில் யானைகள் அவ்வப்போது ஊருக்குள் வருவது வழக்கம். இந்நிலையில், இன்று தண்ணீர் எடுப்பதற்காக கமலாச்சி என்ற பெண்மணி சென்றபோது புதருக்குள் நின்றிருந்த காட்டு யானை அவரை தாக்கியது.

இதில், படுகாயமடைந்த கமலாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து, அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த பகுதியில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. வனத்துறைக்கு புகார் தெரிவித்தாலும், ஒரிரு நாள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், பொது மக்களுக்கு எந்தவித பலனும் கிடைப்பதில்லை என்று குற்றம் சாட்டினர்.



இதனால், மேலும் உயிர் மற்றும் பொருள் சேதங்கள் ஏற்படும் முன், இங்கு சுற்றித்திரியும் காட்டு யானைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் துரத்தி, நிறந்தர தீர்வு காண வேண்டும், என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்பிரச்சினைக்கு, நிறந்தர தீர்வு ஏற்படவில்லை என்றால், வனத்துறையை கண்டித்து போராட்டம் நடத்தப்படும், என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...