நீலகிரி: உதகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பகுதியில் ஞாயிற்றுக் கிழமை வலம் வந்த காட்டெருமையால், அங்குள்ள பொது மக்கள் மற்றும் வாகனங்களில் பயணித்தவர்கள் அச்சமடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில், வனப்பகுதிக்குள் இருந்து உணவு தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், குன்னூர், உதகை தேசிய நெடுஞ்சாலையில் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை பகுதியில் காட்டெருமை ஒன்று உலா வந்தது.
அந்த காட்டெருமை பேருந்து நிழல் குடை அருகே வந்ததால், பயணிகள் அச்சத்துடன் அங்கிருந்து ஓடினர்.

பின், அங்கிருந்து அந்த காட்டெருமை, குன்னூர் - உதகை முக்கிய சாலையில் நீ்ண்ட நேரம் உலாவிக் கொண்டிருந்ததால், அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
சுமார் அரை மணி நேரத்திற்குப் பின் காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றபின், இயல்பு நிலை திரும்பியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.