உதகை அருகே தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்; காதலனை தேடி சென்னைக்கு புறப்பட்டதால் பரபரப்பு..!

நீலகிரி: உதகை அருகே தாலிகட்டும் நேரத்தில், திருமணத்தை நிறுத்திய மணப் பெண், தன் காதலனை தேடி சென்னைக்கு புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



நீலகிரி: உதகை அருகே தாலிகட்டும் நேரத்தில், திருமணத்தை நிறுத்திய மணப் பெண், தன் காதலனை தேடி சென்னைக்கு புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும், தூனேரி கிராமத்தை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் எளிமையான முறையில் கடந்த 29 ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.

திருமண நாளன்று, படுகர் இன மக்களின் வழக்கம் படி, தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன் மூன்று முறை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? எனக் கேட்க வேண்டும். மணப்பெண் சம்மதம் என்று சொன்னால் மட்டுமே மணமகன் தாலியை கட்ட முடியும்.



அவ்வாறாக, மணமேடையில் மணமகன் ஆனந்த், மணப்பெண், பிரியதர்சினியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என இருமுறை கேட்டபோதும் மௌனமாக இருந்த மணப்பெண், மூன்றாவது முறை கேட்கும்போது எனக்கு சம்மதமில்லை எனக்கூறி, அவர் தாலியை வைத்திருந்த கையை தடுத்து அங்கிருந்து எழுந்தார்.



மணப்பெண்ணின் இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்ப்தியது. மேலும், அங்குள்ள அவரது உறவினர்கள் மணப்பெண்ணை தடுத்து நிறுத்த முற்பட்டும், என்னை திருமணம் செய்து கொள்ள வேறு ஒருவர் வருகிறார் என்று தெரிவித்தார்.

"என் காதலன் எனக்காக அவரது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். அவரது குழந்தைகளை நான் தான் பார்த்துகொள்ள வேண்டும். உங்களை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். எனவே எனக்கு இந்த திருமணம் வேண்டாம். ஒரு மணி நேரம் பொறுங்கள், அவர் வந்துவிடுவார்", என்று அனைவருக்கும் அதிர்ச்சியாளித்தார்.



தொடர்ந்து, அங்கிருந்து செல்ல முற்பட்ட போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் அவரை கண்டித்து தாக்குகின்றனர். இந்நிலையில், அந்த மணப் பெண் ஒரு மணி நேரம், சென்னையில் வசிக்கும் தன்னுடைய காதலன் வருவார் என்று காத்திருந்தார். கடைசிவரை, அவர் வராததால் தன் காதலான பார்தீபனை தேடி, பிரியதர்சினி சென்னை சென்றுள்ளதாகவும், அதற்கு பெற்றோர்கள் உறவினர்கள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவி்ல்லை, என்றும் கூறப்படுகிறது.

தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண், திருமணத்தை நிறுத்தி, தன் மனதை மாற்றிக்கொண்டு காதலனை கைபிடிக்க, அவரை தேடி சென்ற சம்பவம், அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...