கோவை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த வந்த நிலையில், அண்மையில் ரஜினிகாந்தின் உடல் நலம் காரணமாக அவர் அரசியலுக்கு தற்போது வரமாட்டார், என்ற அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில், அந்த அறிக்கை தன்னுடையது அல்ல என மறுத்த ரஜினி, அதேசமயம் அதிலுள்ள மருத்துவ குறிப்புகள் உண்மையென அவர் விளக்கம் அளித்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேற்கும் வகையில், அவரது ரசிகர்கள், கோவையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட கோவையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் 'எங்கள் ஒட்டு உங்களுக்குத் தான். நீங்க வாங்க ரஜினி'; ஆட்சி அரசியல் மாற்றம் விரும்பும் மக்கள்' என ரஜினிகாந்த் படத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
இதேபோல, 'எந்நாளும் அழியாது லட்சியம், நம் தலைவர் நாடாள்வர் நிச்சயம்' என்ற வாசகங்களும், கோவை மாவட்ட தலைமை ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இணைச்செயலாளர் கோவை ரவி என்பவர் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.