உயர்மின் கோபுர விவகாரம்: சில கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன், நானும் விவசாயி என்பதால் வாதிட விரும்பவில்லை - திருப்பூரில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பேட்டி

திருப்பூர்: உயர்மின் கோபுர விவகாரத்தில், விவசாயிகள் தெரிவித்த ஒரு சில கருத்துக்களை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். நானும் விவசாயி என்பதால் ரத்த சொந்தமான விவசாயிகளுடன் வாதிட விரும்பவில்லை, என திருப்பூரில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: உயர்மின் கோபுர விவகாரத்தில், விவசாயிகள் தெரிவித்த ஒரு சில கருத்துக்களை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். நானும் விவசாயி என்பதால் ரத்த சொந்தமான விவசாயிகளுடன் வாதிட விரும்பவில்லை, என திருப்பூரில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.



திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜக சார்பில் இளைஞர்கள் கட்சியில் இணையும் சங்கமம் என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜகவின் மாநில துணைத் தலைவர், அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், பாரதப் பிரதமர் மோடி அவர்களின் நல்லாட்சியையும் பாஜகவின், கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு தேசிய நீரோட்டமான பாஜகவில் இளைஞர்கள் இணைந்து வருவதாக, தெரிவித்தார்.

உயர்மின் கோபுர விவகாரத்தில், காங்கேயத்தில் அளித்த பேட்டி திரித்து ஒளிபரப்பப்பட்டு உள்ளதாகவும், அதில் விவசாய நிலங்கள் வழியே உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு மாற்றுவழி திட்டம் இல்லாதபோது, மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆய்வு செய்து உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து சான்றிதழ் வழங்குவதாகவும், இதற்கு மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்துள்ளதாக கூறினார்.

இருப்பினும் விவசாயிகளின் ஒரு சில கருத்துக்களை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு, நானும் விவசாயி என்பதால் ரத்த சொந்தமான விவசாயிகளுடன் வாதிட விரும்பவில்லை எனவும், எனக்காக அறிவித்த ஒரு கோடி ரூபாய் விவசாயிகளின் நலனுக்காக பயன்பட வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், இந்து பெண் வீட்டின் முன் ஆபாசமாக நடந்து கொண்ட ஏபிவிபி தலைவருக்கு எய்ம்ஸ் மருத்துவ குழுவில் உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது, குடியிருப்பில் இருவருக்கும் இடையேயான பிரச்சனை என்பதால் அது அவர்களுக்குள் சுமூகமாக தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

இதையும், தொல் திருமாவளவன் விவகாரத்தையும் ஒரே மாதிரி பார்க்க முடியாது, என்று தெரிவித்தார்.

மேலும், அனைத்து மதத்திற்கும் பொதுவான கட்சியாக பாஜக இருப்பதாகவும் தெரிவித்த அவர் அவர், குறிக்கப்பட்ட நாளில் வேல் யாத்திரை, சஷ்டி நாளில் பயண திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், டிசம்பர் 6 ஆம் நாளன்று அனுமதி வழங்கக் கூடாது என காங்கிரஸ் கட்சி பிளவு அரசியல் செய்வதாக, குற்றம் சாட்டினார்.



இந்நிகழ்ச்சியில், பாஜகவின் மாவட்ட மாநில நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...