கோவை: இன்று கொண்டாடப்பட்டு வரும், தமிழ்நாடு தினத்தின், ஒரு பகுதியாக, கோவை பெரியாரிய கூட்டமைப்பாளர்கள், தமிழகத்திற்கு தனிக்கொடியை, மாநில அரசு அறிவிக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: இன்று கொண்டாடப்பட்டு வரும், தமிழ்நாடு தினத்தின், ஒரு பகுதியாக, கோவை பெரியாரிய கூட்டமைப்பாளர்கள், தமிழகத்திற்கு தனிக்கொடியை, மாநில அரசு அறிவிக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் கேக் வெட்டி தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டங்களுக்கு, பிறகு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறுகையில், "பெரியாரிய உணர்வாளர்கள் இந்த விழாவை கொண்டாடி வருகிறோம். இந்த நாளில், பறிபோன தமிழர் உரிமைகளை மீட்பது, சாதியற்ற தமிழகத்தை உறுவாக்குவது உள்ளிட்ட உறுதியேற்று விழாவாக கொண்டாடுகிறோம்.
இந்த விழாவுக்காக, நாங்கள் தமிழக வரைபடத்துடன் வெள்ளை நிறத்தில் கொடியை அமைத்தோம். ஆனால், அதற்கு காவல்துறை தடை விதித்துள்ளனர்.
கர்நாடகா, நாகலாந்து மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு தனிக்கொடியை அரசுகளே அமைத்துள்ளது. ஆனால், தமிழக அரசு இந்த கொடியை தடை செய்தது ஏனென்று தெரியவில்லை, என்றார்.
தமிழக அரசு அனைத்து மக்களும், ஏற்கும் விதமாக தமிழகத்திற்கு தனிக்கொடியை அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் பெரியாரிய வடிவமைமைப்பினர் வடிவமைத்த கொடியை ரத்து செய்வோம். கர்நாடகத்தை போல் இத்தினத்தில் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார்.
பெரியார் கூட்டமைப்பினர் தமிழ்நாட்டுக்கு என தனிக் கொடியை அறிவித்திருந்த நிலையில், அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.