கோவை: கோவையில் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து கோவையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் VMC மனோகரன் அவர்கள் தலைமையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் தமிழக பொருப்பாளருமான சஞ்சய் தத் கலந்து கொண்டார்.