கோவை: கோவையில் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு இரு சக்கர வாகனத்திற்கு தீ வைத்து கொளுத்திய மூன்று இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை கணபதி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகப்பாண்டி. கோவை மாநகராட்சியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார்.
அப்போது, குடிபோதையில் அங்கு வந்த மூன்று வாலிபர்கள் ஆட்டம் பாட்டமென சத்தம் போட்டு கொண்டு இருந்தனர். இதனை முருகப்பாண்டி தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தகராறு முற்றியது. பின்னர் ஆத்திரத்தில் 3 வாலிபர்களும் முருகப்பாண்டியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
அடுத்த தெருவுக்கு ஓட்டம் பிடித்தவர்கள் அங்கு கோபிநாத் என்பவரது வீட்டு முன்பு நின்ற மொபட்டில் ஏறி அமர்ந்தபடி சத்தமிடவே, சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, மூன்று வாலிபர்களும் தனது மனைவியின் இரு சக்கர வாகனத்தின் மீது அமர்ந்திருந்ததைக் கண்டு அவர்களிடம் தட்டி கேட்டுள்ளார். இதனால் மீண்டும் அந்த மூன்று வாலிபர்களும் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்து கிளப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், சிறிது நேரம் கழித்து கோபிநாத் மீண்டும் வெளியே வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள் மீது தனித்தனியாக சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (வயது 28), அருண் (21), பிரவின் குமார் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், சம்பவ இடத்தின் அருகே பக்கத்து தெருவில் மளிகை கடை வைத்துள்ள ராஜசேகர் என்பவரது மோட்டார் சைக்கிளும் தீவைத்து எரிக்கப்பட்டிருப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.