வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம்!

கோவை: கோவையில் மத்திய பாஜக அரசு மேற்கொண்ட வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

கோவை: கோவையில் மத்திய பாஜக அரசு மேற்கொண்ட வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது.



அண்மையில் விவசாயிகளுக்கு எதிராக 3 சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் நினைவு தினம் விவசாயிகள் உரிமை மீட்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு, இந்த தினத்தில் மத்திய பாஜக மேற்கொண்ட வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி காந்திய வழியில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது. 



தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர், மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பகுதி, வட்ட அமைப்பு நிலை காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...