கோவையில் இருசக்கர வாகனத்தில் வந்த அரசு ஊழியர்களை தாக்கி 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20,000 பணம் கொள்ளை - போலீசார் விசாரணை!

கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அரசு ஊழியர்களை தாக்கி 6 பவுன் தங்க நகை மற்றும் 20000 பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை: கோவை கருமத்தம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அரசு ஊழியர்களை தாக்கி 6 பவுன் தங்க நகை மற்றும் 20000 பணம் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை இருகூர் அடுத்த அத்தப்பகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் நாகமணி. இவர் கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இந்நிலையில், வழக்கம்போல் நேற்று பணிக்கு வந்த அவர், பணி முடிந்த பின் அங்கு பணிபுரியும் ராமு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கருமத்தம்பட்டியை நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது, தனியார் கல்லூரி அருகே வரும்போது செல்போன் அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து, ராமு இருசக்கர வாகனத்தை நிறுத்தி போன் பேசியுள்ளார். அப்போது திடீரென அந்த பகுதியில் இருந்து வந்த மர்ம நபர்கள் இருவர் திடீரென நாகமணி வைத்திருந்த கைப்பையை பிடுங்கிவிட்டு காட்டுப்பகுதிக்குள் ஓடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மர்ம நபர்களை துரத்தினர். 

இதனை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் நாகமணியை பிடித்து, அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துவிட்டு தப்ப முயன்றனர். அப்போது அதனை தடுக்க வந்த ராமுவை கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 500 ரூபாய் பணத்தை பிடுங்கி கொண்டு மாயமாகினர். 

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் நாகமணி கைப்பையில் 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 5 பவுன் தங்க செயின் மற்றும் ஒரு பவுன் தாலிக்கொடியை கொள்ளையர்கள் பிடுங்கிச் சென்றது தெரியவந்தது. 

இதனையடுத்து, போலீசார் அந்த பகுதியில் ஏதேனும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு ஊழியரிடம் தங்கச் செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...