கோவையில் நொய்யல் ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - 3 மணிநேர தீவிர தேடுதலுக்கு பிறகு சடலங்கள் மீட்பு!

கோவை: கோவையில் நொய்யல் ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மூன்று மணிநேர தேடுதலுக்குப் பிறகு இருவரது உடல்களும் மீட்கப்பட்டது.

கோவை: கோவையில் நொய்யல் ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மூன்று மணிநேர தேடுதலுக்குப் பிறகு இருவரது உடல்களும் மீட்கப்பட்டது. 



கோவை வடவள்ளி அடுத்த பாப்ப நாயக்கன் புதூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் நாகராஜன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (31). இதே பகுதியில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் பிரபாகரன் (29). 

தமிழ்செல்வன் ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ பணியாளராக பணியாற்றி வந்தார். பிரபாகரன் தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நண்பர்களான இருவரும் தமிழ்செல்வனின் பிறந்தநாளான நேற்று கோவிலுக்குச் சென்றுவிட்டு, மாலை நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள சித்திரைச்சாவடி அணை பகுதிக்கு சென்றனர். கைகாட்டி பிரிவு பாலத்தின் கீழ் ஆற்றில் இறங்கிய இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய தமிழ்ச்செல்வன் 20 அடி ஆழத்தில் சேற்றில் சிக்கிக் கொண்டார். இதனால் பதற்றமடைந்த பிரபாகரன், தமிழ் செல்வனை மீட்கும் முயற்சியில் நீரில் மூழ்கி சேற்றில் சிக்கிக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கும் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். 

பின்னர் இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  

இந்த நிலையில், மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போராடி இருவரது உடல்களையும் சடலமாக மீட்ட தீயணைப்புத் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தொண்டாமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...