கோவையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை: கோவையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சீரநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த மதன் குமார்(28) கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய இவர், மற்ற இணைய சூதாட்டங்களிலும் ஈடுபட்டு பணம் சம்பாதித்து இருக்கின்றார். அது அவருக்கு ஆர்வத்தை தூண்டவே தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியவர், ஏராளமான பணத்தை இழந்துள்ளார்.

இந்நிலையில், இழந்த பணத்தை மீண்டும் சம்பாதிக்க வேண்டும் என தொடர்ந்து விளையாடி வந்த அவருக்கு தோல்வியே கிடைத்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த மதன் குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். ஆன்லைன் மூலம் பணத்தை இழந்து இருந்த மதன்குமார் கடும் மன உளைச்சலில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில், நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஆன்லைன் பப்ஜி கேமிற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த மதன்குமார் தற்கொலை செய்துள்ளார்.

ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி அதனைவிட்டு வெளியேற முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...