கோவை நஞ்சுண்டாபுரம் அருகே விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனம் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிப்பு!

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் அருகே விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனத்தை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.



கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் அருகே விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனத்தை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.



கோவை திருச்சி சாலையில் இருந்து நஞ்சுண்டாபுரம் வரை புதிதாக சுமார் 203 கண்காணிப்பு கேமராக்கள் கடந்த சில தினங்களுக்கு முன் பொருத்தப்பட்டது. அதனை மாநகர காவல் ஆணையர் சுமித்சரன் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதுக்கரை மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவரது மகன் அஜய் குமார்(21). தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வரும் இவர், தனது பைக்கில் நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் விபத்து ஏற்பட்டு பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்த அவரை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இச்சம்பவம் குறித்து காந்திபுரம் மேற்கு காவல் நிலைய போக்குவரத்து புலனாய்வுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், சமீபத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் கொண்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, அதிவேகமாக வந்த ஷிப்ட் கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காரின் எண்ணை வைத்து உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நஞ்சுண்டாபுரம் செக்போஸ்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது எனவும் இதன் காரணமாக விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்ததோடு D1 ராமநாதபுரம் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...