கோவையில் கடந்த 2 ஆண்டுகளிகல் 10,400 பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்

கோவை: கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,400 பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர், என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,400 பெண்கள் திருமண நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர், என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

பெண்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பணமும், 8 கிராம் தங்க நாணயமும், பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் பணமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. நிதி உதவி வேண்டுவோர், திருமணத்துக்கு 40 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், இ-சேவை மையங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம், இத்திட்டங்களுக்கு பயனாளிகள் விண்ணப்பம் அளித்து வருகின்றனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட சமூகநலத் துறைக்கு அலுவலகத்துக்கு, சரி பார்க்க அனுப்பப்படுகிறது. பின், தகுதியுள்ள விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. 

இது குறித்து சமூகநலத் துறை அதிகாரி கூறுகையில், "கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 10 ஆயிரத்து 400 பெண்கள் திருமண நிதியுதவித் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். நடப்பு ஆண்டிற்கு, இதுவரை இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை," என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...