பொள்ளாச்சி கிருஷ்ணா குளத்திற்கு வந்தடையும் நகராட்சி கழிவுநீரை, சுத்திகரிப்பு செய்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்வதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மழைக் காலங்களில் வெளியேறும் தண்ணீர் மற்றும் பொள்ளாச்சி நகர் சாக்கடை கால்வாய் நீர், முழுவதும் ஜமீன் ஊத்துக்குளி - கிருஷ்ணா குளத்தில் தேங்கும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மழைக் காலங்களில் வெளியேறும் தண்ணீர் மற்றும் பொள்ளாச்சி நகர் சாக்கடை கால்வாய் நீர், முழுவதும் ஜமீன் ஊத்துக்குளி - கிருஷ்ணா குளத்தில் தேங்கும் வகையில் 60 ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. 



இந்த குளத்தில் தேங்கும் தண்ணீர் ஜமீன் முத்தூர், செல்லாண்டி கவுண்டன்புதூர், ராமபட்டினம் வழியாக செல்கிறது. கிருஷ்ணா குளத்தை நீர் ஆதாரமாக கொண்டு 19 அணைக்கட்டுகளும், அவற்றை ஒட்டி 396 கிணறுகள் மற்றும் 1,897 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 

இந்நிலையில், நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த பட உள்ளதால், பழைய மாட்டு சந்தை இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 



கிருஷ்ணாகுளம் தடுப்பணை மூலம் பல ஆண்டுகளாக விவசாயிகள் தென்னை உள்ளிட்ட பல்வேறு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், என்று தெரிவித்தனர். விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளதால், சார் ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளோம், பொள்ளாச்சி நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கிருஷ்ணா குளத்திற்கு சொந்தமாகும். அரசு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து மாற்று இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...