குன்னூரில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கு சென்று குறைகளை கேட்டறிந்த காவல் துறையினர்!

நீலகிரி: குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் உள்ள மக்களின் குறைகளை வெலிங்டன் காவல்துறை சார்பில் நேரிடையாக சென்று குறை தீர்க்கும் முகாம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.


நீலகிரி: குன்னூர் அருகே ஜெகதளா கிராமத்தில் உள்ள மக்களின் குறைகளை வெலிங்டன் காவல்துறை சார்பில் நேரிடையாக சென்று குறை தீர்க்கும் முகாம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையினர் பொதுமக்களின் குறைகளை நேரடியாகச் சென்று கேட்டு அறிந்து, அவர்களின் குறைகளை தீர்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.



இதனைத் தொடர்ந்து, குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில், வெலிங்டன் காவல் ஆய்வாளர் பிலிப் ஆகியோர் அருவங்காடு அருகில் உள்ள ஜெகதளா கிராமத்தில் நேரிடையாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

இந்த முகாமில் கிராமத்திலுள்ள மக்கள் ஆறு மனுக்களை வழங்கினர். இதில் குறிப்பாக தங்கள் கிராமத்தில் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு காவலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைக்கான மனுக்களை அளித்தனர். இதில் மூன்று மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.



இதுகுறித்து குன்னூர் உட்காேட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் கூறுகையில், பொதுமக்கள் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களை எந்த நேரத்திலும் சந்தித்து குறைகளை கூறலாம். முடியாத சூழ்நிலையில் இதுபோன்ற பொதுமக்கள் இருக்கும் இடத்திலேயே நேரடியாக வந்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதற்கு தீர்வு காணும் விதமாக இது பாேன்ற முகாம்கள் அவ்வப்போது நடைபெற்று வருவதாகவும், இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...